உரிய காலத்தில் தேர்தல் நடத்தித்தான் ராஜபக்சக்களுக்குப் பழக்கம் என்கிறார் நாமல்

0
254
Article Top Ad

நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பதவிக் காலத்தையும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தையும் இரு வருடங்களுக்கு நீடிக்க வேண்டும். அதற்கான யோசனை முன்வைக்கப்படும் என்று டயானா கமகே எம்.பி. சபையில் விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

தேர்தல்கள் உரிய காலப்பகுதியில் நடத்தப்படும் என்றும், அவ்வாறு நடத்தித்தான் ராஜபக்சக்களுக்குப் பழக்கம் எனவும் தெரிவித்த நாமல் ராஜபக்ச,

நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நீடிக்கப்படமாட்டாது என்றும் அதற்கான தேவையும் எழவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மூன்றாண்டுகளுக்குள் நிறைவேற்றுவோம் என்றார்.