ஐசிசியின் முக்கிய விருதுகளை சுவீகரித்த பாகிஸ்தான் வீரர்கள்

0
163
Article Top Ad

வீரர்கள் வெளிப்படுத்திய திறமையை அளவுகோலாகக்கொண்டு சர்வதேச கிரிக்கட் பேரவை ( ஐசிசி) யால் வருடாந்தம் சிறந்த வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்படுவதுண்டு . அந்தவகையில் 2021ம் ஆண்டில் வெளிப்படுத்திய பெறுபேறுகளுக்கிணங்க சிறந்த வீர வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.

ஆண்டின் சிறந்த வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருது பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹின் ஷா அப்ரிடி க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வருடத்தில் 36 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அப்ரிடி 22.20 என்ற சராசரியில் மொத்தமாக 78விக்கட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஆண்டின் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரருக்கான விருதை இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் தனதாக்கினார். கடந்தாண்டில் மொத்தமாக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜோ ரூட் மொத்தமாக 1708 ஓட்டங்களை குவித்திருந்தார்.

கடந்த ஆண்டில் வெறுமனே 6 ஒருநாள் சர்வதேசப்போட்டிகளில் மாத்திரே விளையாடியபோதும் 67.50 என்ற சராசரியில் 405 ஓட்டங்களைக் குவித்திருந்த பாபம் அஸாம் ஆண்டின் சிறந்த ஒரு நாள் வீரருக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2021ம் ஆண்டில் சிறந்த டி20 வீரருக்கான விருதை பாகிஸ்தான் அணியின் ஆரம்பத்துடுப்பாட்டவீரரும் விக்கட்காப்பாளருமான மொஹமட் ரிஸ்வான் பெற்றுக்கொண்டார். கடந்தாண்டில் 29 டி20 போட்டிகளில் விளையாடிய ரிஸ்வான் 1326 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.