இந்தியாவின் விளையாட்டு மேம்பாட்டிற்காக இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்

0
266
Article Top Ad

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆரம்ப ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஐ.பி.எல் தொடர்களின் மூத்த வீரராகவும் திகழ்கிறார். இதுவரை 150 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 5 ஆயிரத்து 449 ஓட்டங்கள் குவித்துள்ள அவர், அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

35 வயதான டேவிட் வார்னர், ஐ.பி.எல் தொடரில் 50 அரைச் சதங்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீயுடனான கலந்துரையாடல் ஒன்றில் அவர் கருத்து தெரிவிக்கும் போது,

ஐ.பி.எல், உலகின் சிறந்த போட்டித் தொடர். நான் இந்தியாவுக்குச் செல்லும்போது, உலகின் சிறந்த போட்டியில் விளையாடுவதைப் பார்க்கிறேன். டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டியாக இருந்தாலும், பயிற்சி மற்றும் நுண்ணறிவு எனக்கு அதிகமாகக் கிடைக்கிறது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் போதெல்லாம் உள்ளூர் மக்களின் வரவேற்பால் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய ஆதரவாளர்களிடமிருந்து கிடைத்த ஆதரவு அமோகமானது. எதிர்காலத்தில் இந்தியாவில் விளையாட்டு மேம்பாட்டிற்காக இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.

எனக்கு முதன்மையான விடயம் என்னவென்றால், இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக என் குடும்பத்தையும்  என்னையும் வெளிப்படையாக இருகரம் நீட்டி வரவேற்றுள்ளனர்.

நான் வெளியே செல்வதையும், அங்குள்ள மக்களைச் சந்திப்பதையும் விரும்புகிறேன். சில சமயங்களில் அது பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும்.

உள்ளூர் மக்களுடன் இணைந்திருப்பது எனக்குப் பிடிக்கும். அவர்கள் எனக்கு அவ்வளவு கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் இந்தியாவுக்கு கடன் பட்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன் என்றார்.