ஜூனியர் உலகக் கிண்ண கிரிக்கெட் – பாகிஸ்தான் அணித் தலைவர் சாதனை

0
272
Article Top Ad

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணித் தலைவர் காசிம் அக்ரம் துடுப்பாட்டத்தில் 135 ஓட்டங்களும் பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார்.

மேற்கு இந்திய தீவுகளில் ஜுனியர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட 16 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன. இதில், ஜூனியர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் 5ஆம் இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின.

முதலில் துடுப்பாட்டம் செய்த பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளை இழந்து 365 ஓட்டங்களைப் பெற்றது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவர் காசிம் அக்ரம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 135 ஓட்டங்கள் எடுத்தார்.

தொடர்ந்து பந்து வீச்சில் 37 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனால், ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். மேலும் இப்போட்டியில், பாகிஸ்தான் அணி 238 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது.