இலங்கை பின்நோக்கிப் பயணித்தமைக்கு இரு அரசுகளும் பொறுப்புக்கூற வேண்டும் – பீல்ட் மார்ஷல் பொன்சேகா எம்.பி. குற்றச்சாட்டு

0
138
Article Top Ad

 

“சுதந்திரமடைந்த பின்னர் இந்நாடு பின்நோக்கிப் பயணித்தமைக்கு நாட்டை மாறி, மாறி ஆண்ட இரு கட்சிகளும் பொறுப்புக்கூற வேண்டும்.”

– இவ்வாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“நாடு சுதந்திரமடைந்தபோது இலங்கை சிறந்த மட்டத்தில் இருந்தது. அதன்பின்னரும் ரூபாவின் பெறுமதி பாதுகாக்கப்பட்டது. இன்று எமது நாட்டு நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. கறுப்பு சந்தையில் 250 ரூபாவுக்கு டொலரை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மக்களும் அரசியல்வாதிகளை முழுமையாக நம்பாமல், சிந்தித்து, தகுதியானவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நாடு மேம்படும். இங்கு ஆட்சிகள் மாறும்போது கொள்கைகளும் மாறுகின்றன. இந்நிலைமை மாறவேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்” – என்றார் .