சுதந்திர தினத்தை யாழில் கரிநாளாக அனுசரித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

0
157
Article Top Ad

இலங்கையின் சுதந்திர தினமான நேற்றையநாளைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம்  இடம்பெற்றது.

நேற்றுக் காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி விசாரணையை நடத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு போன்றவற்றை வலியுறுத்தி இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியவாறு யாழ்ப்பாணம் முனியப்பர் கோயில் பகுதி வரை பேரணியாகச் சென்றனர்.
………