இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்லத் தயாராகும் சுமந்திரன்

0
96
Article Top Ad

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுகப்பட்டுள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மீனவர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை –  சுப்பர்மடம் மீனவர்கள் ஐந்தாவது நாளாக  நேற்றும் தொடர்ச்சியாகத் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், போராட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்ற சுமந்திரன் எம்.பி., மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன் அத்துமீறி நுழையும் மீனவர்களைக் கைதுசெய்வதற்குக் கடற்படையினருக்கு உத்தரவு விடக் கோரியும்,

2017ஆம் ஆண்டின 11ஆம் இலக்க  இழுவை மடி தடைச் சட்டம் மற்றும் வெளிநாட்டு படகுகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மீன்பிடி வள்ளங்களை ஒழுங்குபடுத்தும் 2018ஆம் ஆண்டின் முதலாம் இலக்க சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த கோரியும்

உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், அதற்கு வடக்கு மீனவ சங்கங்களின் ஆதரவு வேண்டும் எனவும் மீனவர்கள் மத்தியில் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தும் விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தரப்புகளுக்கு தாம் எப்போதும் பூரண ஆதரவை வழங்குவோம் என மீனவர்கள் இதன்போது தெரிவித்தனர்.
…..