முதன்முறையாக ஆபிரிக்க கிண்ணத்தைக் கைப்பற்றியது செனகல் அணி

0
340
Article Top Ad

33 ஆவது ஆபிரிக்கக் கிண்ண கால்பந்து போட்டியில் செனகல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி கிண்ணத்தை தன் வசப்படுத்தியது.

2 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறும் இந்தப் போட்டி இம்முறை கமரூன் நாட்டில் நடைபெற்றது. இதில் 24 அணிகள் பங்கேற்றன.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில் செனகல் – எகிப்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பான இந்தப் போட்டியில் வழக்கமான ஆட்ட நேர (90 நிமிடம்) முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 30 நிமிட கூடுதல் நேரத்திலும் கோல் எதுவும் விழவில்லை. இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட்-அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் செனகல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி கிண்ணத்தை தன் வசப்படுத்தியது.

2002 ஆம் ஆண்டு கமரூனிடமும் 2019 ஆம் ஆண்டு அல்ஜீரியாவிடம் தோற்று கிண்ணத்தை இழந்த செனகல் அணி முதன்முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.