சுவீடனில் அமுலில் உள்ள பெரும்பாலான கொவிட் கட்டுப்பாடுகள் இன்று புதன்கிழமை முதல் நீக்கப்படும் என்று சுவீடிஷ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது கோவிட் தொற்று நோய் நிலவரம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் கட்டுப்பாடுகளை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரோன் திரிபு முந்தைய திரிபுகளை போல கடுமையான நோய்க்கு வழிவகுக்காது என சுவீடனின் பொது சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இதையடுத்து கட்டாய தடுப்பூசி சான்றிதழ் மற்றும் பிற கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொவிட் கட்டுப்பாடுகள் இரண்டு கட்டங்களாக நீக்கப்படும் என சுவீடன் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
முதல் கட்ட கட்டுப்பாடுகள் பெப்ரவரி 9 ஆம் திகதி நீக்கப்படும். இரண்டாவது கட்டமாக ஏப்ரல் முதலாம் திகதி முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
முதல் கட்டத்தில் பொது நிகழ்வுகள், பார்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொது போக்குவரத்து உட்பட பல்வேறு இடங்களில் நுழையும்போது தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படும்.
எதிர்காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில், 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.