பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக யாழ். நகரில் போராட்டம்! அரசியல்வாதிகள், மக்கள் அணிதிரண்டு கையெழுத்து

0
214
Article Top Ad

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கையெழுத்திட்டுப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இ.ஆனோல்ட், கே.சயந்தன், எஸ்.சுகிர்தன் உள்ளிட்ட வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கையெழுத்துக்களைப் பதிவு செய்தனர்.