வீராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெறாது

0
217
Article Top Ad
Kohli

இந்திய அணியின் நட்சத்திர வீரர் வீராட் கோலி கடைசியாக இந்திய அணி தென் ஆபிரிக்காவிற்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் செய்தபோது தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் உபாதைகாரணமாக 2வது போட்டியில் பங்கேற்காமை காரணமாக அவரால் 100வது டெஸ்ட் போட்டி மைல்கல்லை தென் ஆபிரிக்கத் தொடரில் எட்டமுடியாமற் போனது. இந்த நிலையில் இலங்கை அணியுடன் இந்தியாவில் நடைபெறவுள்ள தொடரின் போது பெங்களுரு மைதானத்தில் 100வது போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது இலங்கையுடனான முதலாவது போட்டி மொஹாலியில் நடைபெறும் என தற்போது வெளியிடப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி வீராட் கோலியின் உபாதைகாரணமாக விளையாடாமால் விட்டாலேதவிர அவரது 100வது டெஸ்ட் போட்டி மொஹாலியிலேயே நடைபெறும்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடருக்கான திருத்தப்பட்ட போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின்போது, முதலில் 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது தொடரிலும், அதன்பின்னர் 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது.

முதல் இருபதுக்கு இருபது போட்டி லக்னோவிலும், அடுத்த இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகள் தரம்சாலாவிலும் நடைபெறவுள்ளன.

அவ்வாறே முதல் டெஸ்ட் மொஹாலியில் எதிர்வரும் மார்ச் 4 ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையிலும், 2 ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை பெங்களூருவிலும் இடம்பெறவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

தொடர் நேர அட்டவணை

முதலாவது இருபதுக்கு 20 போட்டி- பெப்ரவரி 24ஆம் திகதி – லக்னவ்

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி- பெப்ரவரி 26ஆம் திகதி – தர்மஷாலா

மூன்றாவதுஇருபதுக்கு 20 போட்டி- பெப்ரவரி 27ஆம் திகதி – தர்மஷாலா

முதலாவது டெஸ்ட் போட்டி- மார்ச் 4-8 வரை – மொஹாலி

இரண்டாவது டெஸ்ட் போட்டி (பகலிரவு) – மார்ச் 12-16 வரை – பெங்களூரு