அபாயகரமான போன் கதிர்வீச்சு – தடுக்கும் முறைகள் என்னென்ன?

0
832
Article Top Ad

கதிரியக்க கதிர்வீச்சு குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். கதிரியக்க கதிர்வீச்சு மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானதும், பெரும் தீங்கு விளைவிப்பது ஆகும். அதை குறித்து தனியாக சொல்ல வேண்டும் என்றில்லை.

பல வகையான கதிர்வீச்சுகள் இருந்தாலும், கதிரியக்கக் கதிர்வீச்சு மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. இது மனிதர்களிடத்தில் கடுமையான நோய்களை ஏற்படுத்தும்.

இந்த கதிரியக்க கதிர்வீச்சிலிருந்து முடிந்தவரை விலகி இருப்பது நல்லது. உங்கள் ஸ்மார்ட்போனும் கதிர்வீச்சை உருவாக்குகிறது என்பதை அறிவீர்களா. ஒருவேளை, உங்களில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்த கதிர்வீச்சு பல ஸ்மார்ட்போன்களில் குறைவாகவும் பலவற்றில் அதிகமாகவும் உள்ளது.

மேலும் இந்த வகையான கதிர்வீச்சு மனிதர்களுக்கு ஆபத்தானது. தற்போது அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு காரணமாக, பயனர்கள் சில நேரங்களில் இந்த கதிர்வீச்சுகளுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறார்கள்.

இது சில நேரங்களில் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக உள்ளது. இந்த கதிர்வீச்சிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

Anti Radiation ஸ்மார்ட் போன் கவர்

இன்று டெக் சந்தையில் பல வகையான ஸ்மார்ட்போன் கவர்கள் கிடைக்கின்றன. இவற்றில் சில கதிர்வீச்சு எதிர்ப்பு பண்புகளுடன் வருகின்றன. அதாவது இது போன்ற ஸ்மார்ட்போன் கவரில் இருக்கு அட்டையில் இருந்து கதிர்வீச்சு வெளியேற முடியாமல் நடுவில் தங்கிவிடுவதால், இந்த கதிர்வீச்சு போன் பயன்படுத்தும் நபர்களை பாதிக்காது.

இத்தகைய கவர்கள் ஆன்லைன் மற்றும் சில்லறை வர்த்தக கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. மேலும் அவற்றின் விலையும் சாதாரண ஸ்மார்ட் போன் கவர் விலையை ஒத்தே இருக்கும்.

ஆன்டி ரேடியேஷன் ஸ்மார்ட்போன் கோட்டிங் (Anti Radiation Smartphone Coating)

இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்களில் ஆன்டி-ரேடியேஷன் பூச்சு பூசப்படுகிறது.
ஸ்மார்ட்போனைச் சுற்றி ஒருவித பூச்சு பயன்படுத்தப்படுகிறது. இது கதிர்வீச்சைத் தடுப்பதோடு, மொபைல் பயனர்களிடத்தில் அது சென்றடையாமல் கவசம் போல பாதுகாக்கிறது. கதிர்வீச்சு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதால், இந்த பூச்சு பயன்பாடு எதிர்காலத்தில் வரைமுறைப் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் வாழ்க்கையை எவ்வளவு எளிமையாக மாற்றினாலும், கதிர்வீச்சு போன்ற விஷயங்கள் பயனர்களுக்கு ஆபத்தானவை தான். எனவே முடிந்தவரை தேவை இருப்பின் மட்டுமே ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தவும்.

தேவையற்ற நேரங்களிலும் போனை உடன் வைத்திருப்பது அவசியமற்றது; ஆபத்தானதும் கூட. முக்கியமாக உறங்கும் போது ஸ்மார்ட்போன் அருகில் இருப்பதை தவிர்க்கவும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழஞ்சொல்லுக்கு இணங்க, தேவைக்கு அதிகமாக எதை பயன்படுத்தினாலும், அது மனித வாழ்வில் தீங்கினை ஏற்படுத்தும். அந்த தீங்கு நோய்க்கு காரணமாகும். எனவே, தேவையான தருணங்களில் மட்டும் ஸ்மார்ட்போனை உங்களுடன் அண்ட விடுங்கள்.