Article Top Ad
உக்ரைன் அரசு சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டு உக்ரைனின் பிரதான நகரங்களில் இருந்து 1.5மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் வெளியேறி வருவதாக புட்டின் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுதல் காரணமாக மரியுபோல் நகரில் உள்ள பொதுமக்களை வெளியேற்றும் முயற்சி இரண்டாவது தடவையாகவும் தோல்வியடைந்துள்ளது.
அந்நகரம் இன்னும் மின்சாரம் மற்றும் நீரின்றி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, மத்திய உக்ரைனில் உள்ள வின்னிட்சா விமான நிலையம் ரஷ்ய ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி அழிக்கப்பட்டதை உக்ரைன் ஜனாதிபதி உறுதி செய்துள்ளார்.