தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் நீடித்த தீர்வுக்குப் பேசுங்கள்! ஜெனிவாவில் இலங்கைக்கு அமெரிக்கா அறிவுரை

0
127
Article Top Ad

 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் மற்றும் ஊடகப் பேச்சாளர் எம் .சுமந்திரன் ஆகியோரை இன்றையதினம் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் சந்தித்துப் பேசியபோதும் அனைத்து இலங்கையர்களுக்குமான அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், நீதி ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி ஆராய்ந்ததாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் நின்று, நிலைத்து நீடிக்க கூடிய ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சு நடத்துமாறு இலங்கை அரசை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது

”சகலரையும் ஒன்றிணைத்து, நிரந்தரத் தீர்வு ஒன்றை நோக்கி முன்னேறுவதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளுடனும், சிவில் சமூக நிறுவனங்களுடனும் ஈடுபட்டு செயற்படுமாறு நாம் இலங்கை அரசை கோருகின்றோம்” – என்று ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் நேற்றைய அமர்வில் இலங்கை தொடர்பான கலந்துரையாடலின்போது அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கையில் முக்கியமான பல மனித உரிமைகள் வழக்குகள் பின்னடைவு கண்டிருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா, மிக முக்கியமான மனித உரிமை மீறல் வழக்கொன்றில் சம்பந்தப்பட்ட ஒருவர் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு, கிழக்கில் காணிகள், பொதுமக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்தும் இந்த உரையில் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

சிவில் சமூக தரப்புகள் கடும் கண்காணிப்புக்கும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது குறித்தும், சிவில் நிர்வாகம் இராணுவ மயப்படுத்தப்படுவதற்கு எதிராகவும் அமெரிக்கா இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
……..