சர்வதேச நீதிமன்ற விசாரணையை புறக்கணித்தது ரஷ்யா!

0
177
Article Top Ad

உக்ரைன் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்ற விசாரணையை ரஷ்யா புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டு மீதான தாக்குதலை நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிட வேண்டுமென சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் வலியுறுத்திய நிலையில், இந்த விசாரணைக்கு ரஷ்யா தனது பிரதிநிதியை அனுப்பவில்லை.

இந்த விசாரணையில் பங்கேற்க தங்கள் அரசாங்கத்துக்கு விருப்பமில்லை என நெதர்லாந்துக்கான ரஷ்ய தூதர் நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளார்.

‘உக்ரைனின் கிழக்கு பிராந்தியங்களான லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் ஆகியவற்றில் இனப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. ஆனால், ரஷ்யா கூறுவது கொடூரமான பொய்.

இந்த விசாரணையை ரஷ்ய பிரதிநிதி புறக்கணித்திருப்பதிலிருந்தே உண்மையை அறிந்துகொள்ளலாம். எனவே, இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு உத்தரவிட வேண்டும்’ என உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரிநெவிச் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது ரஷ்யா!

உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிர் நிலைப்பாட்டை எடுத்த 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், தென்கொரியா, உக்ரைன், சுவிஸ்லாந்து, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், மொனாக்கோ, மாண்டினீக்ரோ, நியூஸிலாந்து, நோர்வே, தாய்வான், சான் மரினோ, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் விவகாரத்தில் ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளை தவிர ஏனைய ஐரோப்பிய நாடுகள் போன்றவை ரஷ்ய எதிர்ப்பு நிலையை கடைப்பிடித்தது.

அடுமட்டுமல்லாமல், மேற்குறித்த 17 நாடுகள், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்ததோடு, உக்ரைனுக்கு ரஷ்ய துருப்புக்களை எதிர்கொள்வதற்காக இராணுவ உதவியும் வழங்கியது.