அறிவிக்கப்பட்டதைவிட உண்மையான கொவிட் மரணங்கள் மும்மடங்கு அதிகம்

0
177
Article Top Ad

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால்  18 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது, அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட மரண எண்ணிக்கையைப் போன்று கிட்டத்தட்ட மூன்று மடங்காகும்.

கொவிட்-19 நோயை, உலகளாவிய வைரஸ் பரவலாக உலக சுகாதார அமைப்பு அறிவித்த இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வொஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வறிக்கை இதனைத் தெரிவித்தது.

191 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த தகவல்களை ஆராய்ந்த பின்னர், இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றால் நேரடி மரணம் நேர்ந்ததோடு அந்தத் தொற்றால் ஏற்கனவே இருந்த இதய, நுரையீரல் நோய்கள் கடுமையாகி மற்ற பல மரணங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

வைரஸ் பரவல் நேருமுன் ஏற்பட்ட மரணங்களோடு அண்மைய ஆண்டுகளின் மரண எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்து, புதிய மதிப்பீடு கணக்கிடப்பட்டது. உலக அளவில் சராசரியாக, ஒவ்வொரு 100,000 பேரில் 120  கொவிட் மரணங்கள் நேர்ந்தன.

பொலிவியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளில், மரண வீதம் ஆக அதிகமாக இருந்தன.  ஐஸ்லந்து, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் ஆகக் குறைவான மரணங்கள் பதிவாயின.