செல்சியின் உரிமையாளர் அப்ரமோவிச் உள்ளிட்ட 7 பேரின் £150 பில்லியன் சொத்துக்கள் முடக்கப்பட்டன!

0
135
Article Top Ad

அவர்களின் கைகளில் ”உக்ரேனிய மக்களின் இரத்தம்” என்ற வரையறைக்குள் குற்றம் சாட்டப்பட்ட கிரெம்ளின் சார்பு வர்த்தக குழாமின் தனிநபர்கள் மீதான தடையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான நெருங்கிய தொடர்பை பேணும் பிரிட்டனின் புகழ் பெற்ற உதைப்பந்தாட்ட கழகமான செல்சி (Chelsea FC) அணியின் உரிமையாளரான ரோமன் அப்ரமோவிச்சும் இணைக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய அமைச்சரவையால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தடைகள் பட்டியலில் கிரெம்ளின் சார்பு வர்த்தக குழாமின் பிரதான பில்லியனர் என வர்ணிக்கப்படும், Chelsea FC உரிமையாளரின் சொத்துக்கள் முடக்கப்பட்டதோடு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஏழு புதிய உயரடுக்கு வர்த்தக பிரமுகர்களை உள்ளடக்கிய தடைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள உதைப்பந்தாட்ட அணியின் உரிமையாளரான அப்ரமோவிச், புட்டினுடன் பல தசாப்தங்களாக தான் கொண்டிருந்த நெருங்கிய உறவைக் மறுத்து வந்தார்.

இவருக்கு அடுத்ததாக தடைப்படிட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ள Oleg Deripaska, £2 பில்லியன் மதிப்புள்ள தொழிலதிபர், பிரிட்டிஷ் அரசியல் செயற்பாடுகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக இணைப்பட்டஇவர்களுடன் ரஸ்யாவின் 7 பெரும் வர்தகர்களின் 150 பில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பிரித்தானியாவால் முடக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.