புரோ ஹொக்கி லீக் – ஆர்ஜென்டினாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

0
217
Article Top Ad
9 அணிகள் பங்குபற்றும் மூன்றாவது புரோ ஹொக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றது.
இதில் ஒவ்வொரு அணியும் மற்றய அணிகளுடன் தலா 2 முறை விளையாட வேண்டும்.
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில், இன்று இடம்பெற்ற தொடரில் மீண்டும் இந்தியா – ஆர்ஜென்டீனா அணிகள்  மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா – ஆர்ஜென்டீனா ஆட்டத்தில் 3-1 என்ற கணக்கில் ஆர்ஜென்டீனா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது