பங்களாதேஷ்க்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டி; தென்னாபிரிக்க அணி வெற்றி

0
228
Article Top Ad
பங்களாதேஷ் அணி தென் ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்ஆபிரிக்க அணியை வீழ்த்தியது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி  இன்று ஜொஹனஸ்பேர்க்கில்  நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணித் தலைவர் தமீம் இக்பால் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதலே தென் ஆபிரிக்க அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி அடுத்தடுத்து  விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணியில்  அபிப் ஹொசைன் மட்டும் சிறப்பாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தார். இதனால் பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அபிப் ஹொசைன் 72 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தென் ஆபிரிக்க அணியில் ரபடா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் .
தொடர்ந்து 195 ஓட்டங்கள் என்ற இலக்குடன் தென் ஆபிரிக்க அணி அதிரடியாக விளையாடியது. இதனால் 37.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக குயிண்டான் டி காக் 62  ஓட்டங்களும் ,  கைல்  வெர்ரைன் 58 ஓட்டங்களும் எடுத்தனர் .
இதனால் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என சமநிலையில் உள்ளன. 3 ஆவது ஒரு நாள் போட்டி வருகிற மார்ச் 23 ஆம் திகதி நடைபெறுகிறது.