ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் – ஹட்ரிக் வெற்றியை நோக்கி குஜராத்

0
187
Article Top Ad

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன், குஜராத் டைட்டன்ஸ் அணி மோத உள்ளது.

தொடக்க ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிராக 206 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து மிரட்டிய பஞ்சாப் அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 137 ரன்னில் சுருண்டது. அதன் பிறகு அடுத்த ஆட்டத்தில் சென்னையை 54 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடி எழுச்சி பெற்றது.

இதில் லியாம் லிவிங்ஸ்டன் 60 ரன்கள் எடுத்ததுடன், 2 விக்கெட்டும் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக மின்னினார். பேட்டிங்கில் லிவிங்ஸ்டன், தவான், ராஜபக்சே, ஷாருக்கான், ஒடியன் சுமித், பந்து வீச்சில் ரபடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் கை கொடுக்கிறார்கள். இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ தனிமைப்படுத்துதலை முடித்து அணியினருடன் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளார். இருப்பினும் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். மொத்தத்தில் நடப்பு சாம்பியன் சென்னையை எளிதில் தோற்கடித்ததால் பஞ்சாப் வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் வரிந்து கட்டுவார்கள்.

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி குஜராத் டைட்டன்ஸ் தான். தனது முதல் இரு லீக்கில் லக்னோ, டெல்லி அணிகளை போட்டுத்தாக்கிய குஜராத் டைட்டன்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு குறி வைத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, லோக்கி பெர்குசன் முதல் இரு ஆட்டங்களில் ஹீரோவாக ஜொலித்தனர். பேட்டிங்கில் சுப்மான் கில், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ராகுல் திவேதியா நம்பிக்கை அளிக்கிறார்கள்.

இரு அணிகளும் ஏறக்குறைய சரிசமபலத்துடன் மல்லுகட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.