குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஜோஸ் பட்லர் அதிரடி அரைச்சதம்

0
270
Article Top Ad

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 15 ஆவது ஐ.பி.எல் தொடரில் இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 24 ஆவது லீக் போட்டி மும்பையில் உள்ள டி.வை பட்டேல் மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டிக்கான நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி குஜராத் அணி முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.

தொடக்கத்தில் மேத்யூ வேட் (ரன் அவுட் ), 12 ஓட்டங்களிலும் விஜய் ஷங்கர் 2 ஓட்டங்களிலும், சுப்மன் கில் 13 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த ஹார்திக் பாண்டியா, அபினவ் மனோகர் நிலைத்து நின்று ஆடி ஓட்டங்களைச் சேர்த்தனர்.

சிறப்பாக விளையாடிய அபினவ் மனோகர் 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் மில்லர் ,ஹார்திக் பாண்டியா இருவரும் பந்துகளை ,பவுண்டரி சிக்சருக்கு பறக்கவிட்டனர் .

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் 4 இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது . சிறப்பாக விளையாடிய ஹார்திக் பாண்டியா 52 பந்துகளில் 87 ரன்களும் , டேவிட் மில்லர் 14 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து 193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக படிக்கல் , ஜோஸ் பட்லர் களமிறங்கினர் .படிக்கல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் . பின்னர் யாரும் எதிர்பார்க்காத நிலையில் அஸ்வின் களமிறங்கினார்

தொடக்கத்தில் விக்கெட் இழந்தாலும் ஜோஸ் பட்லர் அதிரடி குறையவில்லை . குஜராத் அணியின் பந்துவீச்சை அவர் துவம்சம் செய்தார். அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் அரை சதம் அடித்த பட்லர், 54 ரன்களில் ஆட்டமிழந்தார்