ரஷ்ய போர்க்கப்பல் மீது உக்ரைன் தாக்குதல்

0
272
Article Top Ad

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 50 ஆவது நாளாக நீடித்து வருகின்றது. உக்ரைன் – ரஷ்யா இடையே நீடித்து வரும் போர் குறித்த முக்கிய செய்திகள் பின்வருமாறு

ஏப்ரல் 14, 1.47 PM 18:00

எல்லையோர நகரங்களில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் மீது ரஷியாவின் பிரையன்ஸ்க் மாகண கவர்னர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். உக்ரைனின் இந்த தாக்குதலில் 10 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயம் அடைந்து இருப்பதாகவும் கண்டனம் தெரிவித்தார்

ஏப்ரல் 14, 1.47 PM 15:00

உக்ரைனின் நெப்டியூன் ஏவுகணைகள் ரஷியக் கப்பலுக்கு மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என்று உக்ரைன் கவர்னர் மக்சிம் மார்சசென்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரைன்- ரஷியா போரின் ஆரம்பத்தில் உக்ரைனிய படைகளை சரணடையுமாறு ரஷிய படைகள் கோரிய போது அவர்கள் மறுப்பு தெரிவித்து வந்தனர். தற்போது உகரைனிய வீரர்களை சிறைபிடிக்க வந்ததாகத் கூறப்படும் ரஷ்ய போர்க்கப்பல், உக்ரைனிய ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதில் இருந்து 510 பேரை மீட்பதற்கு ரஷியா முயற்சித்து வருவதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மொஸ்க்வா என்ற கப்பலில் இருந்து வெடிமருந்துகள் வெடித்து சிதறியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

மொஸ்க்வாவில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, அனைத்து பணியாளர்களும் முன்னதாகவே வெளியேற்றப்பட்டதாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒடெசா கடற்கரையில் உள்ள ரஷிய கருங்கடல் கடற்படையின் முதன்மைக் கப்பலான ‘மொஸ்க்வா’வை கடுமையாக சேதப்படுத்தியதாக கூறப்பட்டு உள்ளது.

போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின் விளைவாகவே அதில் இருந்த வெடிமருந்துகள் வெடித்ததாக ரஷியா கூறியுள்ளது.

இதன்போது கப்பல் கடுமையாக சேதமடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள ரஷியா தீவிபத்துக்கான காரணத்தை இது வரை கூறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.