சென்னை அணியின் வெற்றிப் பயணம் தொடருமா?

0
244
Article Top Ad

ஐ.பி.எல் தொடரின் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூருவை எதிர்கொள்கிறது.

நடப்பு சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றி, 6-ல் தோல்வி என்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் தொடர்ந்து 9-வது  இடத்திலேயே இருக்கிறது.

முதல் 8 ஆட்டங்களுக்கு தலைவராக இருந்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது ஆட்டத்திறன் பாதிக்கப்படுவதாக கூறி பொறுப்பில் இருந்து பின்வாங்கியதால் தலைவர் பதவி மீண்டும் டோனியிடம் சென்றுள்ளது.

டோனியின் தலைமையில் சென்னை அணி முந்தைய ஆட்டத்தில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்தது.

அதில் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் (99 ரன்). டிவான் கான்வே (85 ரன்) இருவரும் பட்டையை கிளப்பினர். இத்தகைய தொடக்கத்தை தான் அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. பந்து வீச்சில் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி 4 விக்கெட் சாய்த்தார்.