தேவையற்ற வகையில் வெளியில் வராதீர்கள் – மக்களிடம் இராணுவத் தளபதி வேண்டுகோள்

0
217
Article Top Ad

மக்களைத் தேவையற்ற வகையில் வெளியில் வரவேண்டாம் என்று பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

வன்முறையில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்த முப்படையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்றும் இராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“நாட்டையும், மக்களையும், பொதுச் சொத்துக்களையும் பாதுகாக்கும் இராணுவத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பை வழங்குங்கள். வீடுகளில் இருங்கள். தேவையற்ற வகையில் வெளியில் வரவேண்டாம்” என்றும் இராணுவத் தளபதி ஊடகங்களிடம் இன்று மேலும் தெரிவித்துள்ளார்.