தவறான பொருளாதார மதிப்பீடுகளை கூறி மக்களை ஏமாற்றியுள்ளனர்!

0
134
Article Top Ad

அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு தவறான மதிப்பீடுகளை சமர்ப்பித்தமையே கடன்பொறிக்கு காரணம். பணம் அச்சிடுதல் அல்லது ஏனைய நிதி பல்வேறு வழிகளில் வருவாய் மதிப்பீடு காட்டப்பட்டுள்ளமையால், செலவீனங்களுக்கு ஏற்ப கடனை அதிகரிக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாகவே கடன் பொறி உருவானது என் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பொது நிதி தொடர்பான குழுவிடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.

யதார்த்தமற்ற முறையில் அதிக வருவாய் மதிப்பீடுகள் நாடாளுமன்றுக்கு காட்டப்பட்டுள்ளன. இதனடிப்படையிலேயே குறைக்க முடியாத செலவீனங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. இது உண்மைக்குப் புறம்பானது என்று தெரிந்தும், தவறான மதிப்பீடுகளைச் சமர்ப்பித்து நாடாளுமன்றம், தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கூறப்பட்டபடி, வருமானம் வெளிப்படையாக வரவில்லை. ஒவ்வொரு மாதமும் அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக மாத்திரம் இலங்கைக்கு சுமார் 600 அல்லது 650 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.