Article Top Ad
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு இந்த சம்பள உயர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் கூறியுள்ளார்.
சம்பள உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுத்துறையினருக்கான சம்பளம் கட்டம் கட்டமாக 20,000 ரூபாவால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் கூறுகின்றன. இதேவேளை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் நாட்டின் பொருளாதார நிலைகள் குறித்து பிரதமர் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.