21வது திருத்தத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும்!

0
292
Article Top Ad

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பொருளாதார மீட்சியை அதிகரிக்கவும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் அவசியமானது. உத்தேச திருத்தமானது கடந்த கால குறைபாடுகளை போக்க நல்லதொரு ஆரம்பம் எனவும், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பொருளாதார மீட்சியை உயர்த்தவும் இது உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.