’21’ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சை வழங்க இணக்கம்!

0
130
Article Top Ad

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளது.

உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை இறுதிப்படுத்துவதற்கான சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று பிரதமர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது 19 ஆவது திருத்தச்சட்டத்தை சில திருத்தங்கள் சகிதம் 21 ஆவது திருத்தச்சட்டமூலமாக முன்வைப்பதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

புதிய யோசனைகளை, புதிய அரசியலமைப்பிற்கு உள்வாங்குவது பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தடை விதிக்கும் யோசனைக்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதேவேளை, ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சை மாத்திரம் வழங்க கட்சி தலைவர்கள் இணங்கியுள்ளனர்.