சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்!

0
442
Article Top Ad

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 15 இலங்கையர்கள் அவுஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு இன்று வியாழக்கிழமை காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.அதன்படி, இன்று அதிகாலை 4.40 மணியளவில் அவுஸ்ரேலிய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் இந்த குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதேவேளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சுமார் 19 நாட்களுக்கு முன்னர் இழுவை படகில் பயணித்த அவர்கள், அவுஸ்ரேலிய கடற்கரைக்கு அருகாமையில் சென்றுள்ளனர்.இதன்போதே, இழுவை படகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து, அவுஸ்ரேலிய எல்லைக் காவலர்களால் கைப்பற்றப்பட்டு, அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.