விண்கல் மாதிரியில் உயிர் தோன்றியதற்கான ஆதாரம்

0
153
Article Top Ad

ஜப்பானிய விண்கலம் ஒன்று சேகரித்த விண்கல் தூசியில் பூமியில் உள்ள உயிர் கட்டமைப்பின் சில கரிமப் பொருளை கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது விண்வெளியில் இருந்தே பூமியில் உயிர் தோன்றி இருக்கலாம் என்பதை காட்டுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

300 மில்லியன் கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் ரியுகு என்ற விண்கல்லுக்கான ஆறு ஆண்டுப் பயணத்துக்குப் பின்னரே 2020 ஆம் ஆண்டில் அந்த விண்கல்லில் இருந்து பண்டைய பொருள் பூமிக்குக் கொண்டுவரப்பட்டது.

ஆனால் தற்போதே அந்த விண்பொருளின் இரகசியத்தை கண்டறிய ஆரம்பித்துள்ளனர்.

இருண்ட சிறிய பாறை ஒன்றில் 5.4 கிராம் அளவான தூசியை அவர்கள் முதல்முறை ஆராய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் மேற்கு ஜப்பானில் இருக்கும் ஒகாயா பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஆய்வுக் குழு ஒன்றில் ஆய்வு பற்றிய விபரம் நேற்று வெளியிடப்பட்டது.

அதில் ‘அமினோ அமிலங்கள் மற்றும் பிற கரிமப் பொருட்கள் பூமியில் உயிர்கள் தோன்றியதற்கான துப்புகளை அளிக்கின்றன’ என்று குறிப்பிட்டுள்ளது.