ரஷ்யாவுடனான எல்லையில் சுவர் கட்டுகிறது பின்லாந்து

0
119
Article Top Ad

ரஷ்யாவுடனான தனது கிழக்கு எல்லையில் தடுப்பை கட்டுவதற்கு அனுமதிக்கும் வகையில் எல்லை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர பின்லாந்து திட்டமிட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு மத்தியில் அச்சுறுத்தலுக்கு எதிரான தயார்நிலையை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

வரலாற்று ரீதியாக ரஷ்யாவுடன் போர்களை சந்தித்திருக்கும் பின்லாந்து தற்போது நேட்டோ கூட்டணியில் இணைவதற்கும் விண்ணப்பித்துள்ளது. அந்த நாடு காட்டினால் சூழப்பட்ட 1300 கிலோமீற்றர் நீளமான எல்லையை ரஷ்யாவுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்த எல்லைகள் அடையாளங்கள் மற்றும் பிளாஸ்டிக் கோடுகளாலேயே அடையாளம் இடப்பட்டுள்ளது.

ரஷ்யா எல்லைகள் வழி தஞ்சக்கோரிக்கையாளர்களை அனுப்புவதன் மூலம் அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும் என்று பின்லாந்து அஞ்சுகிறது.

இந்நிலையில் தஞ்சக்கோரிக்கையாளர்களை ஏற்பதை ஒரு நுழைவுப் புள்ளியில் மாத்திரம் மேற்கொள்ள முடியுமான முன்மொழி உட்பட சட்டத்தில் அரசு திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாகக் கூறப்படுகிறது.