இலங்கை விடயத்தில் மோடி தலையிடுகின்றார் ; ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

0
180
Article Top Ad

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் குளறுபடிகள் தற்போது பாக்கு நீரிணையையும் கடந்து இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சுமத்தியுள்ளார்.

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு அழுத்தம் விடுத்துள்ளதாக வௌியாகியுள்ள தகவல் தொடர்பில் அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தலைவர் கோப் குழுவில் மன்னார் காற்றாலை விடயம் தொடர்பில் கூறும் போது, இந்தியப் பிரதமரின் அழுத்தத்தால் அதனை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக கூறியிருந்தார். எனினும் அதற்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்தக் கருத்தை மின்சார சபை தலைவர் வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.