யாழ்.பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி பதவியேற்றார்

0
116
Article Top Ad

யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் 28 வது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர நேற்று (12) சுபவேளையில் தனது பதவியினைப் பொறுப்பேற்றார்.

மத வழிபாடுகளுடனும் யாழ்ப்பாண பாதுகாப்புபடை தலைமையக வீரர்களின் இராணுவ மரியாதைகள் வழங்கப்பட்டதுடன், இராணுவ அணிவகுப்புடன் புதிய கட்டளைத் தளபதி வரவேற்கப்பட்டு தனது பணியை ஆரம்பித்தார்.

இந்நிகழ்வில் படைத் தளபதிகள், முன் பராமரிப்பு பிரதேசம் (வடக்கின்) தளபதி, படைப்பிரிவுத் தளபதிகள் , இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.