பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டெழ என்ன வழி?

0
151
Article Top Ad

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கையின் மிக முக்கிய நட்பு நாடுகள்கூட உதவியளிக்க முன்வராமல் இருப்பதற்கு பிரதான காரணமாக கடந்த காலம் முழுவதும் தவறான பொருளாதார தரவுகளையும் தகவல்களையும் அரசாங்கம் வெளிப்படுத்தி வந்தமையே என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வியட்நாம் பங்களாதேஸ் போன்ற நாடுகள் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன்னோக்கி நகர்ந்தன. அவர்களது அனுபவத்தின் பின்னரான பொருளாதார கொள்கைகள் மிகவும் பலம் வாய்ந்ததாகவும் சர்வதேசத்தை வெற்றிகொள்வதாகவும் அமைந்தது.

 

உள்நோக்கி சிந்திக்கும் கொள்கைகள் காரணமாகவே இலங்கை தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் கூட இலங்கைக்கு உதவ தயாரில்லை. இலங்கையின் மிக முக்கிய நட்பு நாடுகளான சவுதிஅரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் இலங்கைக்கு உதவிவழங்க தயாரில்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கையின் பணியாளர்கள் இலட்சக்கணக்கில் பணியாற்றுகின்றனர். ஆனாலும் இலங்கையின் நெருக்கடியில் பற்கேற்க அந்த நாடுகள்கூட தயாராகவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் இலங்கையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோன்றுதான் மேற்குலக நாடுகளும் இலங்கையின் ஜனநாயக மற்றும் மனிதஉரிமைகளை உறுதிப்படுத்திய ஒரு சூழ்நிலையும் நிலையான பொருளாதார கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளன.

இலங்கையை தற்போதைய நெருக்கடியான நிலையில் இருந்து மீட்டெடுக்க மிகவும் காத்திரமான தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கவேண்டியுள்ளது. சம்பிரதாய பூர்வமான பூர்வமான இனவாத, மதவாத சிந்தனைகளுக்கு அப்பாலான நேரடி தீர்மானங்களை அரசாங்கம் எடுத்தால் மாத்திரமே கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கையால் மீள முடியுமென பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

(globetamil)