ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பதற்றம்!

0
194
Article Top Ad

ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து நுழைவாயில்களையும் மூடி ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அதனை கறுப்புத் தினமாக அறிவித்து ஜனாதிபதி செயலகம் முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தற்போது ஜனாதிபதி செயலகத்திற்குள் செல்லும் அனைத்து பாதைகளையும் மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை லோட்டஸ் வீதி உள்ளிட்ட வீதிகள் சிலவும் அங்கு மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.