இந்திய நிதி அமைச்சருடன் மிலிந்த மொரகொட சந்திப்பு!

0
80
Article Top Ad

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்று அந்நாட்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுடன் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

டில்லியில் உள்ள நிதி அமைச்சின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நிதியமைச்சருடன் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்பின் புதிய முன்னெடுப்புக்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

கடந்த மே 27 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது பெரும் போகத்திற்கான 65,000 மெட்ரிக் தொன் உரத்திற்காக விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று 55 மில்லியன் டொலர் கடன் உதவைப் பெற்றுக் கொள்ள உதவியமைக்கு நிதி அமைச்சருக்கு உயர்ஸ்தானிகர் இதன் போது நன்றி தெரிவித்தார்.

இதன் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ள உரம் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி ஓமானிலிருந்து கொழும்பை வந்தடையவுள்ளது.