ஜூலை முதல் பஸ் கட்டணங்கள் பெருமளவில் உயர்வு!

0
134
Article Top Ad

ஜூலை 1 முதல் பஸ் கட்டணங்களை 30 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள், போக்குவரத்து அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (28) கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.

இதில் ஜூலை 1 ஆம் திகதி முதல் பஸ் கட்டணங்களை 30% அதிகரிப்பதற்கு அதிகாரிகள் சம்மதித்துள்ளதாக கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஏனைய பஸ் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, தற்போது 32 ரூபாவாக காணப்படும் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.