யாழ்ப்பாணத்தில் ஒருநாள் கடவு சீட்டு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

0
310
Article Top Ad

கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்முதல் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கடவுச் சீட்டைப் பெறுவதற்கும் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும், இந்த நிலைமையை மாற்றியமைப்பதாகவும் அமைச்சர் தம்மிக்கப் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர மேலும் ஐந்து இடங்களில் பிராந்திய அலுவகங்களையும், ஒருநாள் சேவையையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்