அவுஸ்திரேலியா அபார பந்துவீச்சு ; 212 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

0
174
Article Top Ad

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலியில் இடம்பெறுகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது.

இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பாக நிரோஷன் திக்வெல்ல 58 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் நதன் லயன் 90 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

தமது முதல் இன்னிஸில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி சற்றுமுன்வரை 20 ஓவர்களில் 89 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.