நடிகர் ஜெக்சன் என்டனி விபத்து

0
30
Article Top Ad

அனுராதபுரம் தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த நடிகர் ஜெக்சன் என்டனி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் முதலில் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தலாவ மொரகொட பிரதேசத்தின் ஏழாம் தூண் பகுகிக்கு அருகில் நேற்றிரவு (02) ஜெக்சன் என்டனி பயணித்த கெப் வண்டி ஒன்று காட்டு யானையுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த ஜெக்சன் என்டனி மற்றும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஜெக்சன் என்டனியின் சகோதரரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தினால்இ யானை வண்டியின் மீது விழுந்துஇ கெப் பலத்த சேதமடைந்துள்ளது..

காயமடைந்த ஜெக்சன் என்டனியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை பேச்சாளர் தெரிவித்தார்.

கல்கமுவ பிரதேசத்தில் படப்பிடிப்பொன்றை முடித்துவிட்டு தங்குமிடத்திற்காக அனுராதபுரம் திரும்பும் போது இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.