இலங்கை முன்னெப்போதும் காணாத எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் எரிபொருள் பற்றாக்குறைகாரணமாக அடுத்த ஒருவார காலப்பகுதியில் தமது தூதுவராலயத்தை மூடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மேற்குலக நாடொன்றின் தூதரகம் எச்சரித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கிலப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதேவேளை ஏனைய தூதுவராலயங்களோ தமது கொன்ஸுலர் சேவை பணிகளை குறைத்துள்ளதாக அறியமுடிகின்றது.
வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் உரிய முறையில் இயங்குவதை உறுதிப்படுத்துகின்ற சர்வதேச சட்ட நியதிகளுக்கு இணங்கி நடக்க வெளிவிவகார அமைச்சு தவறியுள்ளதாக பிரபல மேற்குலக நாடொன்றின் தூதுவரொருவர் தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடொன்றின் தூதுவரொருவா கருத்துவெளியிடுகையில் ‘ எமது தூதுவரகத்திலுள்ள எரிபொருள் வெகுவாகக்குறைந்துகொண்டிருக்கின்றது.இன்னமும் ஒருவாரத்திற்கு மாத்திரமே எரிபொருள் உள்ளது. அதன் பின்னர் நாம் மூடவேண்டிய நிலை ஏற்படும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய ஒத்த நிலைப்பாடுடைய பங்காளர்களுடன் இணைந்து நாம் வெளிவிவகார அமைச்சிற்கு அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு நினைவுறுத்துவோம். வியன்னா சாசனத்திற்கு அமைவான சர்வதேச சட்ட நியதிகளின் கீழ் இதனை வெளிவிவகார அமைச்சு நிறைவேற்றவேண்டும்