நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவிடம் உள்ள திட்டம் நாட்டிற்கு சாதகமாக இருக்குமானால், பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதற்கு தான் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆட்சியை வழங்கினால் 6 மாதங்களில் நாட்டை வழமைக்கு கொண்டுவருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்ததாகவும் எனினும் அது சாத்தியமில்லாத விடயமாகும். அவரிடம் ஏதேனும் ஒரு திட்டம் இருக்குமானால், அதை தான் வரவேற்பதாகவும் அந்தத் திட்டத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க விருப்பம் இல்லையென்றால் நாடாளுமன்றத்திலாவது அதனை சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.