ஆண்டிறுதியில் நாட்டின் பணவீக்கம் 70 சதவீதம் வரை அதிகரிக்கும் ; மத்திய வங்கியின் ஆளுநர்!

0
250
Article Top Ad

நாட்டின் பணவீக்கம் எதிர்வரும் சில மாதங்களினுள் 70 சதவீதம்வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற ஊட்டசந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்,

எவ்வாறாயினும், தற்போது மேற்கொண்டுள்ள கொள்கை அடிப்படையிலான செயற்பாடுகள் காரணமாக எதிர்வரும் 2023 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதலே பணவீக்கம் பாரியளவில் குறைவடைக்கூடும்.

உலகளவிலான எரிபொருள் விலை மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளின் வீழ்ச்சி தொடர்பிலான அனுமானங்கள் இந்த கணிப்பில் அடங்குகின்றன. அந்நிய செலாவணியை வலுப்படுத்துவற்காக பல நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாயணச் சபையுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்களவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதியில் இந்நாட்டு உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,859 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். வௌிநாட்டு நாணய இருப்புகள் 1,750 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.