ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவிப்பு

0
238
Article Top Ad

எதிர்வரும் 13 ஆம் திகதி தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி தன்னிடம் அறிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய தினம் கட்சித் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை தான் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தேன். இதற்கமைய எதிர்வரும் 13 ஆம் திகதி தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி தனக்கு அறிவித்தார். அமைதியான முறையில் ஆட்சியை கையளிப்பதற்கான இணக்கத்தை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று இரவு பிரதமரின் தனிப்பட்ட இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாமல் தத்தமது வீடுகளை நோக்கி செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். என்றார்.