இலங்கையுடனான பேச்சுவார்த்தை குறித்து IMF சிவப்பு எச்சரிக்கை!

0
242
Article Top Ad

இலங்கையுடனான மேலதிக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் குழப்பங்கள் தளர்த்தப்படும் என நம்புவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமை தீர்க்கப்படும் என்று நம்புவதாகவும், இலங்கையின் திட்டங்கள் குறித்த உரையாடலை மீண்டும் தொடங்க நிலைமைகள் சீராகுமென நம்புவதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களை போராட்டக்காரர்கள் கையகப்படுத்தியதை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.