நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்!

0
189
Article Top Ad

பன்னீர் புஷ்பங்கள், அழியாதகோலங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பிரதாப் போத்தன். இவரின் இயக்கத்தில் வெளியான வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை பிரதாப் போத்தன் இயக்கியுள்ளார்.

பிரதாப் போத்தன் இவரின் நடிப்பில் வெளியான வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம் உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் பிரதாப் போத்தன் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரின் மறைவிற்கு திரைத்துறையினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.