எரிபொருள் வந்தாலும், எரிபொருள் விநியோக முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (சிபெட்கோ) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
இன்று முதல் எரிபொருள் பாஸ் முறைமைக்கு அமையவே எரிபொருள் வழங்கப்படும்.
ஒரு வாகனத்தை ஒரு தேசிய அடையாள அட்டை (NIC), பாஸ்போர்ட் எண் அல்லது வணிக பதிவு எண் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யலாம்.
அதன்பிறகு, மோட்டார் போக்குவரத்துத் துறையின் (டிஎம்டி) சேஸ் எண், வாகனப் பதிவு எண், நம்பர் பிளேட் மற்றும் இதர விவரங்களைப் பதிவுசெய்து சரிபார்த்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு QR குறியீடு ஒதுக்கப்படும்.
பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட QR குறியீட்டைப் பயன்படுத்தி, நம்பர் பிளேட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரம் இருமுறை எரிபொருளைப் பெறலாம்.
QR குறியீட்டை ஒருவரின் மொபைல் போனில் ஸ்கிரீன்ஷாட்டாக வைத்திருக்கலாம். ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் க்யூஆர் குறியீட்டின் பிரிண்ட் அவுட்டை தங்களிடம் வைத்திருக்கலாம்.
Ceypetco எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மட்டுமன்றி, லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்கும் ஒரே அனுமதிச்சீட்டு இதுவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.