ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது ; ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

0
54
Article Top Ad

ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது. அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள், பாராளுமன்றத்தினுள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே எனது எதிர்ப்பார்ப்பு. ஏன் ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என நாட்டு மக்கள் எங்களிடம் கேட்கின்றனர். நாட்டை அழிக்கவா எதிர்ப்பு அரசியலில் ஈடுபடுகிறோம்? இந்த கேள்வியை இளைஞர்கள் கேட்கிறார்கள்.இது ஒரு முக்கியமான பிரச்சினை, நானும் இது தொடர்பில் சிந்தித்துள்ளேன். எனவே இந்த அமைப்பை மாற்றி இந்த இளைஞர்களின் கருத்துக்களுக்கு நாம் செவி சாய்க்க வேண்டும்.

“போராட்டம் உண்மையில் இன்று இருக்கும் முறைக்கு எதிரான போராட்டமாகும். இது எல்லா அம்சங்களிலும் மாற்றப்பட வேண்டும். எனவே, அமைதியான கருத்துக்களைக் கொண்டவர்களுக்கு அவர்களின் கருத்துக்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும், அதேபோல் அவர்களுக்கு பதிலளிக்கவும் முடியும். மௌனமாக இருப்பவர்களின் கருத்துகளை ஏற்று செயற்பட வேண்டும். ஆனால் போராட்டம் என்ற போர்வையில் அரசாங்கத்தை கவிழ்க்க, வீடுகளை எரிக்க, ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்களை கைப்பற்றுவது ஜனநாயகம் அல்ல. அது சட்டத்திற்கு எதிரானது. அவ்வாறு சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிராக செயல்படுவோம். போராட்டத்தின் ஊடாக இளைஞர்கள் எதிர்காலத்தை உருவாக்க விரும்பினால் அதற்கு முழு ஆதரவு அளிப்பேன்.அமைதியான மக்களுக்காக செய்துள்ளேன். , இன்று அமைதியான மக்கள் நசுக்கப்பட்டுள்ளனர்.அமைதியான மக்கள் கருத்து தெரிவிக்க இன்னொரு தளத்தை உருவாக்குவேன்.அரசியலமைப்புச் சட்டப்படி பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவர் பிரதமர், எனது கட்சியில் நான் மட்டும்தான் இருக்கிறேன். அதனால் என்னால் தேர்வு செய்ய முடியாது.”