இன்றுகாலை 10 மணிக்கு ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம்!

0
90
Article Top Ad

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்கவுள்ளார்.

காலை 10 மணிக்கு அவர் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்கவுள்ளார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நேற்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக 134 வாக்குகளும் டல்ஸ் அழகப்பெருமவிற்கு 82 வாக்குகளும் அனுர குமார திஸாநாயக்காவிற்கு 3 வாக்குகளும் கிடைத்தன.