ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

0
83
Article Top Ad

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதற்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் நட்புறவு கொண்ட அண்டை நாடுகள் என சீன ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

65 ஆண்டுகளுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை நிறுவியதில் இருந்து, இரு நாடுகளும் எப்போதும் பரஸ்பர மரியாதை, சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியை ஊக்குவித்து, பெரிய மற்றும் சிறிய நாடுகளுக்கு இடையே நட்புரீதியான தொடர்புகள் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.